திருச்சி: மாநகர ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிவருபவர் பாசில்கான் (25). இவர், திருச்சி கே.கே. நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்துவருகிறார். இவர் இரண்டு நாள்களுக்கு முன்பு திருச்சி மன்னார்புரத்திலிருந்து கே.கே. நகர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அவர் சென்றுகொண்டிருந்த சாலையின் மத்தியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்புச்சுவரின் இடையில் இருந்த சிறிய இடைவெளியில், நாய் ஒன்று புகுந்து வேகமாகச் சாலையைக் கடந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக காவலர் பாசில்கான் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது நாய் மோதியது.
வேகமாகப் பரவும் காணொலி
இதில், நிலைதடுமாறி வாகனத்துடன் சாலையில் விழுந்த பாசில்கான் சில அடி தூரம் சாலையிலேயே உருண்டார். அப்போது, அவர் தலையில் அணிந்திருந்த தலைக்கவசம் கழன்று ஓடியது. தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர் நல்வாய்ப்பாகக் காயமின்றி உயிர் தப்பினார்.
நாய் மோதி சாலையில் உருண்ட காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது, தற்போது வெளியாகி உள்ளது. அதில், நாய் மோதியதும் காவலர் பைக்கிலிருந்து விழுந்து சாலையில் பல அடி தூரம் உருண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க: VideoIn: காற்றில் பறந்த இளைஞர் - நடந்தது என்ன?