ETV Bharat / city

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு - அறவழியில் போராடிய கே.என். நேரு - திருச்சி மாவட்டச் செய்திகள்

திருச்சி: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக சார்பில் இன்று கறுப்புச் சின்னம் அணிந்து அறப்போராட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் கடை திறப்புக்கு  எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் போராட்டம்

author img

By

Published : May 7, 2020, 4:16 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளை இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில், திமுக சார்பில் இன்று கறுப்புச் சின்னம் அணிந்து அறப்போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில் திருச்சி - தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் கட்சியினர் 5 பேர் கலந்து கொண்டனர். கறுப்புச் சின்னம் அணிந்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கே.என். நேரு செய்தியாளரிடம் கூறுகையில், 'கரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மது கடைகளை அவசரமாகத் திறப்பதன் நோக்கம், மேலும் இந்த நோயை அதிகப்படுத்துவதற்காகத் தான். மதுபான கடைகளை மூட வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் அறிக்கை விட்டும் கூட, அதை கேட்காமல் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. அதற்கு காரணம் மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி பணம் 2,400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை.

நமக்கு வரவேண்டியுள்ள இந்தத் தொகை வந்திருந்தால் கூட, மது கடைகளை திறக்காமல் இருந்திருக்கலாம். எனவே, மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்காத காரணத்தால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது

கூட்டமாக கூடினால் நோய் பரவும் என்று ஏற்கெனவே இருந்த அனுபவத்தின் அடிப்படையில், திறக்காமல் இருந்திருக்கலாம். வயது வாரியாகப் பிரித்து மது வாங்க வரச் சொல்லும் செயல் சரியான செயலாக இல்லை. நிதி இல்லை என்றால் டாஸ்மாக்கை திறக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை உள்ளது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், மத்திய - மாநில அரசுகள் விலையைக் குறைக்காமல் இருக்கிறார்கள். குறைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், கூடுதலாக்கி இருக்கிறார்கள். மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் மத்திய அரசு நிதியைத் தர வேண்டும். மாநில அரசு தினமும் ஒரு கொள்கையை எடுத்து அறிவிக்காமல், நல்ல வல்லுநர்களுடன் ஆலோசித்து சிறப்பாக செயல்பட வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க:

காணொலி மூலம் விசிக தலைவர் திருமாவளவன் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.