ETV Bharat / city

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்; திருச்சியில் ஆப்சென்ட் ஆன அமைச்சர்கள் - மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி எம்எல்ஏக்கள் மட்டும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தியாகிகள்
தியாகிகள்
author img

By

Published : Jan 25, 2022, 6:39 PM IST

திருச்சி: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் திமுகவினர் நினைவிடத்தில் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளையொட்டி, தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தியாகிகள் நினைவேந்தல்

இதன் தொடர்ச்சியாக மேலும், தென்னூர் உழவர் சந்தையிலுள்ள தியாகிகளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்திலிருந்தபோது திருச்சியை சேர்ந்த கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம், உள்ளிட்ட 5 பேர் உயிர் நீத்தனர். இவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால் இரண்டு அமைச்சர்களும் வரவில்லை.

இதையும் படிங்க: சேவல் சண்டைக்கு அனுமதி வேண்டும் - சேவல் வளர்ப்பு ஆர்வலர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.