திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக 11ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் இன்று தொடங்கியது. திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மு ராஜேந்திரன், அவைத்தலைவர் அம்பிகாபதி உள்பட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கே.என். நேரு கூறுகையில், “மாநாடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாநாட்டு பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் பார்வையிடுவார்” என்றார்.
இதையும் படிங்க...திமுக-காங்கிரஸ் கொள்கை ரீதியாக ஒற்றுமையுடன் திகழ்கிறது- கே எஸ் அழகிரி