திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார் முன்னிலையில், துவாக்குடி நகர திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், திருச்சி மாநகர் மாவட்ட துவாக்குடி நகர அமமுக துணைச் செயலாளர் விக்னேஷ்வரி, லால்குடி பேரூராட்சி வட்ட திமுக 14ஆவது செயலாளர் இளவரசன் ஆகியோர் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன், பொதுக் குழு உறுப்பினர் சிவக்குமார், பாசறை செயலாளர் அருண் நேரு, மணவை ஸ்ரீதரன், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.