மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக கடந்த ஆண்டுகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது.
இதில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான குறுவை சாகுபடி துவங்க முடியாமல் பணப்பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.
![பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-01-crop-insurance-former-black-flag-protest-visual-tn10023mp4_04062021112900_0406f_1622786340_450.jpg)
இந்நிலையில், யிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தரங்கம்பாடி தாலுக்கா சேத்தூர் கிராமத்தில் விவசாயிகள் தரிசு நிலத்தில் கருப்புக் கொடியை நட்டு வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.