ETV Bharat / city

அதிமுக எம்எல்ஏ உள்பட மூவருக்கு கரோனா உறுதி! - திருச்சி கரோனா செய்திகள்

திருச்சி: அதிமுக எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் உள்பட மூன்று நிர்வாகிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona confirmed to three, including AIADMK MLA In Trichy

author img

By

Published : Sep 27, 2020, 5:21 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி, முசிறி அதிமுக எம்எல்ஏ செல்வராஜ், அதிமுக மகளிரணி செயலாளர் தமிழரசி ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், பரஞ்சோதி கடந்த சில நாள்களாக மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் நடந்த பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்களில் கலந்து கொண்டார்.

அதேபோல், மகளிர் அணி செயலாளர் தமிழரசி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஆவின் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்ட மூவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.