திருச்சியில் இதுவரை கரோனா வைரஸ் அறிகுறியுடன் ஈரோடு, நாமக்கல், மணச்சநல்லுார் பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அவ்வாறு அறிகுறி இருப்பது தெரியவந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்படுகின்றனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தற்போது சளி, இருமல், காய்ச்சல் அறிகுறியுடன் திருச்சி பகுதியைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை உள்பட இரண்டு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை ஒன்பது பேர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், நான்கு பேருக்கு கரோனா அறிகுறி இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும் ஐந்து பேர் தொடர் மருத்துவம் பெற்றுவருகின்றனர் என டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:கரோனா அறிகுறியுடன் வெளிமாநில நபர் அனுமதி!