ETV Bharat / city

கை கூடுமா, சூரியன் சுடுமா? சூடுபிடிக்கும் மலைக்கோட்டை தேர்தல் அரசியல் களம்! - காங்கிரஸ் திமுக கூட்டணி

குச்சி மிட்டாய் எங்களுக்கு குல்பி ஐஸ் உங்களுக்கா, இப்படி அதிரடியாகப் பேசக்கூடியவர் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு! இப்படி காங்கிரசுக்குச் செல்வாக்கு இல்லை என்பதை மறைமுகமாகத் தெரிவிப்பதில் கில்லாடி. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் திருச்சி திமுக-காங்கிரசில் குழப்பமே நீடித்துவருகிறது. அதுகுறித்த ஒரு பார்வை...

கை கூடுமா, சூரியன் சுடுமா இன்று தெரியும்

author img

By

Published : Jan 31, 2022, 3:33 PM IST

திருச்சி: திருச்சி திமுக கூட்டணி கிட்டத்தட்ட சுமுகமாக முடிந்துவிட்டது எனக் கருதிய நிலையில் அருணாச்சலம் மண்டபத்தில் அதகளம் செய்திருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். திமுகவிற்கு எதிராகக் கூட்டம் போட்டு தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தவர்கள் எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும் என மார்த்தட்ட...

என்னதான் அக்கப்போரு என திருச்சி வேலுச்சாமியிடம் பேசினோம். "சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இதுவரை திருச்சி மாநகராட்சி எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. புனிதவல்லி பழனியாண்டி, சாருபாலா தொண்டைமான், சுஜாதா இப்படி நாங்கள்தான் ஆளுமையாக இருக்கிறோம்.

இவர்கள் மேயராக நாங்கள் ஆதரவளிக்கவில்லையா?

அட்லீஸ்ட் ஒரு கௌரவமான வார்டுகளையாவது ஒதுக்க வேண்டாமா, எங்களால் அவர்களுக்குப் பலம் அவர்களால் எங்களுக்குப் பலம். இதுகூட தெரியாத அமைச்சருக்கு நாலே நாலுவார்டுதானாம் எங்களுக்கு, என்ன அநியாயம்க இது!" என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.

இன்று திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் மீண்டும் பேசுவதாகக் கூறியிருக்கிறார். அவர்கள் எங்கள் வழிக்கு வரவில்லை என்றால் 65 வார்டுகளிலும் தனியாகப் போட்டியிடுவோம் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

திமுக வட்டாரத்தில், "இவர்கள் எட்டு கோட்டங்களாகப் பிரிந்திருக்காங்களாம், அதனால் எட்டு சீட்டாவது கண்டிப்பாக வேண்டும் என்கிறார்கள். இதெல்லாம் நடக்குற காரியமா? நாலே நாலு உறுப்பினர்கள் இருந்தபொழுது இவர்கள் மேயராக நாங்கள் ஆதரவு கொடுக்கலையா?" என்கிறார்கள்.

மலைக்கோட்டையில் மட்டும் மல்லுக்கட்டு

இன்று தெரிந்துவிடும் அரசருக்காக ஒன்று கூடினாலும் ஐந்து - அதற்குமேல் 'வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல' என்கிறார்கள் திருச்சி உடன்பிறப்புகள்.

மலைக்கோட்டையில் மட்டும் மல்லுக்கட்டு தொடர்கிறது, வேற என்னத்த சொல்ல… இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சேவாதள மாநிலப் பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி காங்கிரஸ் அலுவலக வாசலில் தனக்கு சீட் கொடுக்கவில்லை என பாதாகையேந்தி போராட்டம் நடத்தியது தனிக்கதை.

இதையும் படிங்க: குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால் வேட்பாளராக தேர்வுசெய்ய கூடாது - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.