திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் வசித்து வருபவர் ரூபலாராணி. இவர் அருகே உள்ள முத்தனாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் ரூபலாராணி தனது இருச்சக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ரூபலா ராணியின் வாகனத்தை மறித்து அவர் கழுத்தில் இருந்த எட்டு சவரன் தாலிச் செயினை பறித்துள்ளனர். இதில் நிலைதடுமாறி வாகனத்தோடு கீழே விழுந்த ரூபலா ராணி சுதாரித்து எழுவதற்குள், செயின் பறிப்பு ஆசாமிகள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர்.
இதனையடுத்து ரூபலா ராணி மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காவல் துறையினர் செயின் பறிப்பு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கீழடியின் பழமையான நாகரிகம் வியப்பைத்தருகிறது'- அமெரிக்க பயணிகள்