ETV Bharat / city

‘நீட் தேர்வில் மத்திய அரசு வஞ்சித்து விட்டது..!’ - வைகோ குமுறல்

திருச்சி: நீட் தேர்வில் தமிழ்நாட்டு மக்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ
author img

By

Published : Jul 7, 2019, 5:33 PM IST

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நீட் தேர்விற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டிருப்பது என்பதிலிருந்து இரண்டு ஆண்டுகள் அதிமுக அரசு, நம்மை ஏமாற்றி வந்திருப்பது நன்றாகத் தெரிகிறது. மத்திய அரசு, மாநில அரசை நம்ப வைத்துக் கழுத்தறுக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.

இதுகுறித்த தீர்மானத்தை மத்திய அரசு நயவஞ்சகமாகக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருந்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கும் மிகப்பெரும் துரோகமாகும். முகிலன் நலமுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆட்சி நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

என்னுடைய வேட்புமனு ஏற்கப்படுமா? என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது. ஜூலை ஒன்பதாம் தேதி வேட்பு மனு பரீசிலனையின் போது தான் தெரியும். வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் விலையேற்றம் இருக்கும் இது நிதி அமைச்சருக்கும் புரியும்" என்றார்.

Intro:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்Body:திருச்சி:
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று வைகோ கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

நீட் தேர்விற்கு எதிராக தமிழக சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டிருப்பது என்பதிலிருந்து இரண்டு ஆண்டுகள் அ.தி.மு.க அரசு ஏமாற்றி வந்திருப்பது நன்றாக தெரிகிறது. மத்திய அரசு மாநில அரசை நம்ப வைத்து கழுத்தறத்திருக்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது.
திட்டமிட்டு நயவஞ்சமாக மத்திய அரசு தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருந்துள்ளது. இது தமிழகத்திற்கு செய்த பல அநீதிகளில் முக்கியமான அநீதி. தமிழக மக்களுக்கு செய்த அநீதியும், துரோகமும் ஆகும்.
முகிலன் நலமுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆட்சி நீடிக்குமா என்பது கேள்வி குறி தான்.

என் வேட்பு மனு ஏற்கபடுமா என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது. 9 ஆம் தேதி வேட்பு மனு பரீசிலனையின் போது தான்  தெரியும். வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் விலையேற்றம் இருக்கும் இது நிதி அமைச்சருக்கும் புரியும் என்றார்.Conclusion:முகிலன் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வைகோ கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.