ETV Bharat / city

எதிர்ப்புகளை மீறி அமைக்கப்படும் ஆழ்துளைக் கிணறுகள் - மக்கள் வேதனை

திருப்பராய்த்துறை காவிரியாற்றில் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப் பொதுமக்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்த போதும், அதை மீறி அதிகாரிகள் மண் பரிசோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி
திருச்சி
author img

By

Published : Mar 30, 2022, 10:51 PM IST

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவுக்குட்பட்ட திருப்பராய்த்துறை காவிரியாற்றில் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, மணப்பாறை, சிப்காட் தொழிற்பேட்டை, திருச்சி கோட்டை, பொன்மலை ஜங்ஷன் ரயில்நிலையங்களுக்கும், பொன்மலை ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகளுக்கும், குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டிற்கான நீரை எடுத்துச்செல்ல, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (TWAD)மூலமாக மண்பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இத்திட்டத்திற்கு சிறுகமணி ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடந்த 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பலமுறை முயற்சி செய்தபொழுது, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிக்காக அதிகாரிகள் வருவதை அறிந்த மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து முன்னாள் சிறுகமணி பேரூராட்சித் தலைவர் கே.ஆர். ராஜலிங்கம், சமூக ஆர்வலர் வனஜா உள்ளிட்டோருடன் அதிகாரிகள் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காகவும் மண் பரிசோதனை செய்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படாத நிலையிலும், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அதிகாரிகள் மண் பரிசோதனை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பேசிய பொதுமக்கள், "திருச்சி மாவட்டத்தில் கம்பரசம்பேட்டை, திருப்பராய்த்துறை மற்றும் பெருகமணி காவிரியாற்றில் செயல்பட்டு வரும், கூட்டு குடிநீர் திட்டங்களால் நாளொன்றுக்கு பல கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, மணப்பாறை நகராட்சி மற்றும் காகித தொழிற்சாலைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கரையோரங்களில் இருந்த பல ஆயிரம் தென்னை, பனை மரங்கள் காய்ந்து பட்டுப் போயின. விளைநிலங்களில் போடப்பட்டிருந்த போர்வெல்கள் தூர்ந்து போய்விட்டன.

கடுங்கோடையிலும் கரையோரம் ஓடிக் கொண்டிருந்த காவிரியாறு தற்போது நீரோட்டம் தடைபட்டு நடுப்பகுதியில் ஓடுகிறது. சிறுகமணி ஊராட்சியிலேயே தற்போதுவரை முழுமையாக காவிரிகுடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. விவசாயத்திற்கும் தண்ணீர் போதவில்லை. கோடைக்காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால், காவிரித்தாயே கண்ணீர் விடுவாள்" என வேதனையுடன் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.