ETV Bharat / city

மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த 650 பேர் மீது வழக்கு - Kamal campaigning at Trichy malaikottai

திருச்சி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த 650 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த 650 பேர் மீது வழக்கு

author img

By

Published : Mar 25, 2021, 3:10 AM IST

நெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது. தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது தேர்தல் அலுவலர்கள் தக்க நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தி, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பரப்புரை நிகழ்ச்சி, தேர்தல் விதிமுறைகளை மீறி நடைபெற்றதாக திருச்சி மலைக்கோட்டை காவல் துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் இது தொடர்பாக, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட 650 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.