ETV Bharat / city

'ஜிஎஸ்டி என்றால் என்னவென்று தெரியாமல் பேசிவரும் எம்பிக்கள்' - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

ஜிஎஸ்டி (சரக்கு - சேவை வரி) என்றால் என்னவென்று தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிவருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை
author img

By

Published : Oct 1, 2021, 6:23 PM IST

திருச்சி: இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபலான் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று (செப். 30) அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருச்சி மாவட்டம் குழுமணியில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அண்ணாமலை கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், “சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிறந்து பல்வேறு நல்ல விஷயங்களைச் சந்தித்தவர். ராமகோபாலன் திராவிடர் கழகத்தைப் பார்த்தவர். 1980ஆம் ஆண்டு மீனாட்சிபுரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் மதம் மாறுவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து அதற்குரிய தீர்வைக் கண்டவர்.

ஆர்எஸ்எஸ் குறித்த புரிதல் இல்லாமல் பேசும் இவர்கள்

இந்து என்பது வாழ்வியல் முறை என்று கூறியவர். அவர் இல்லை என்றால் தமிழ்நாடு எங்குச் சென்றிருக்கும் என்று எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை. ராம கோபாலன் இறந்தபோது ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.

ராம கோபாலன் கூறிய கருத்துகள் இல்லை என்று கூற முடியாது. ஏற்றுக்கொள்ள கூடியது என்றே அவர் கூறியிருந்தார். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கோயிலைத் திறங்கள் என அமைப்புகளைவிட பொதுமக்கள்தான் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் குறித்த புரிதல் இல்லாமல்தான் அரசியல்வாதிகள் பேசிவருகின்றனர்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் குறித்து இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நாம் விளக்க முன்வர வேண்டும். சரக்கு - சேவை வரி என்றால் என்னவென்று தெரியாத பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்குள்ளனர். இளைஞர்கள் ராம கோபாலன் சித்தாந்தத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.