திருச்சி: 'கோயில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்' என்பது முதுமொழி. அப்படி கோயில் அதிகமாக உள்ள மாவட்டங்களில் திருச்சிக்கு முக்கிய இடமுண்டு. அந்த வகையில்,
- முழுமுதற் கடவுளான பிள்ளையாருக்கு - மலைக்கோட்டை,
- முருகனுக்கு - வயலூர்,
- சிவனுக்கு - திருவானைக்கோயில்,
- பெருமாளுக்கு - ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில்,
- உறையூர் நாச்சியார் கோயில்,
- மாரியம்மனுக்கு - சமயபுரம்
இப்படி ஊரைச்சுற்றி கோயில்களாக இருப்பது மாவட்டத்தின் சிறப்பு.
முற்காலத்தில் சுக்கிர வழிபாடு செய்ய ஸ்ரீரங்கம் உறையூர் திருவானைக்கோயில் பிரபலமானதாக இருந்தது. அதற்கடுத்து, கமலவல்லி நாச்சியார் கோயிலில் சுக்கிரவார புறப்பாடு உற்சவம் பிரசிதிபெற்றதாகும்.
இந்த உற்சவத்தில் தான, தர்மம் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. சுக்கிரனின் அருள் பெற வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது ஐதீகம். தான, தர்மங்கள், அன்னதானம், நன்கொடைகள் வழங்குவது உள்ளிட்டவை காலப்போக்கில் மறைந்துவிட்டாலும், சுக்கிர வழிபாடு மட்டும் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் சுக்கிரவார புறப்பாடு நடைபெற்றது.
இதையும் படிங்க: 'தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்த உளவுத்துறை அலுவலர்கள்: பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி?'