ETV Bharat / city

நிலத்தரகர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவியுங்கள் - திருமாவளவன் வேண்டுகோள் - கலையரங்கம் வளாகம்

தமிழ்நாடு அரசு நிலத்தரகர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

author img

By

Published : Dec 19, 2021, 6:28 PM IST

திருச்சி: மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ்,லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத் தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ”கட்டுமான நல சங்கத்தினர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நிலத்தரகர்களை அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பதாகும்.

இது நியாயமான கோரிக்கை எனவே தமிழ்நாடு அரசு அவர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இது மிகவும் ஆபத்தானதா..?

மக்களவையில் நாளை தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. இதில் பல்வேறு மசோதக்களை தாக்கல் செய்தாலும், இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும்.

திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுக்க கூடிய கோரிக்கை இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

இந்த சட்டத் திருத்த மசோதா வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் என்னோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது. இது மிகவும் ஆபத்தானது, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சிறுபான்மையினரை நீக்குவதற்கு, இது ஏதுவாக அமைந்துவிடும்.

எனவே இது மிகவும் ஆபத்தான மசோதா, இதனை அனைத்து கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: IT Park in Karur:'மேட் இன் கரூர் பிரபலமடைய வேண்டும்' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.