அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் கட்சி மாநில பொதுக் குழு கூட்டம் திருச்சியில் இன்று (டிச.15) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் நவமணி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச் செயலாளர் மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மறைந்த முதலமைச்சர் அண்ணாவுக்கு சபாநாயகராக செயல்பட்டு பதவி பிரமாணம் செய்து வைத்த மூக்கையாவுக்கு சட்டப்பேரவையில் படம் வைக்க வேண்டும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தியாகி ரத்தினவேல் தேவர் பெயர் சூட்ட வேண்டும். திருச்சி விமான நிலையத்துக்கு மாமன்னர் ராஜ ராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும். அதேபோல் திருச்சி மன்னார்புரம் ரவுண்டானாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவ வேண்டும்.
![AIFB pasumpon party general meeting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-07-aiyf-meeting-script-photo-tn10045_15122020193059_1512f_1608040859_540.jpg)
நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு அதனால் வரும் ஜனவரி 23, 24 ஆகிய இரு தேதிகளில் அரசியல் எழுச்சி மாநாடு தேனியில் நடத்த இருக்கிறோம். அதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தி செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணியில் கேட்டுப்பெறப்பட வேண்டுமென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என்றார்.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் காசிராஜன், செயலாளர் காசி மாயத்தேவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : பாஜகவின் துரோகத்தை மக்களிடம் பட்டியலிடுங்கள்: மு.க. ஸ்டாலின்