திருச்சி: என்ஐடி கல்லூரியில் விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் மாநிலம், குல்னா பாகர் ஹாட், சோலார் கோலா, காலிஷ் காலானியைச் சேர்ந்த பாலுப்சன் மகன் சௌரவ்சன் (23). இவர் திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் - பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கல்லூரிக்குக் கடந்த மாதம் 4ஆம் தேதி தான் கரோனா விடுமுறை முடிந்து வந்துள்ளார். சௌவ்ரசனுடன் தங்கியிருந்த சக மாணவர்கள் வெளியே சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்த போது, அறையின் உள்பக்கம் தாழிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
துவாக்குடி காவல்துறை விசாரணை
பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்ற போது சௌரவ்சன் அறையின் மின்விசிறியில் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து வந்த துவாக்குடி காவல்துறையினர், சம்பவ இடத்திற்குக் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து அங்கு தடயங்களைச் சேகரித்தனர்.
பின், உடலைக் கைப்பற்றி அருகிலுள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒன்றரை லட்சத்தை கடந்தது தொற்று பாதிப்பு; 327 பேர் உயிரிழப்பு