திருச்சி: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் கடந்த 23.O4.2022 முதல் நாள் முழுவதும் பிரசாதமாக அதிரசம், லட்டு, மைசூர்பாகு, தேன் குழல் ஆகியவற்றில் ஒன்று திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தப் பிரசாதம் திங்கள் முதல் வியாழன் வரை சுமார் 4,000 பக்தர்களுக்கும், திருவிழா காலங்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் சுமார் 8,000 பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் குறித்த விபரமும் , நன்கொடையாளர்கள் வரேவேற்கபடுகிறார்கள் என்ற விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் நன்கொடையாளராக திருச்சியைச் சேர்ந்த சரவணன் என்பவர் இன்று (மே 10) சுமார் 5,000 லட்டுகளை உபயதாரர் நன்கொடையாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் பக்தர்களுக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் - சிம்மவாகன சிறப்பு ஆரத்தி..!