தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஒன்பது தொகுதிகளில் 172 பேர் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர்.
இதில் 13 பேர் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதைத்தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியலில் 159 பேர் இடம்பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் 22 பேர் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர். இதில், யாரும் மனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதைத்தொடர்ந்து இறுதிகட்ட நிலவரப்படி மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் 15 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர். இதில் மனுக்களை யாரும் திரும்பப் பெறவில்லை. இதையடுத்து களத்தில் தற்போது 15 பேர் போட்டியிடுகின்றனர்.
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 14 பேர் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர். இதில், ஒருவர் தனது மனுவைத் திரும்பப் பெற்றார். இதைத் தொடர்ந்து இறுதிப் பட்டியலில் 13 பேர் இடம்பெற்றுள்ளனர். திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 20 பேர் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர். இதில் இரண்டு பேர் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதைத்தொடர்ந்து, 18 பேர் தற்போது களத்தில் உள்ளனர்.
இதேபோல், திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 17 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர். இருவர் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால், 15 பேர் தற்போது இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மேலும், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 20 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர். இதில், ஆறு பேர் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். மேலும், 14 பேர் தற்போது களத்தில் உள்ளனர்.
இதையடுத்து, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 29 பேர் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர். இதில், யாரும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதனால் இறுதிப் பட்டியலில் 29 வேட்பாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில், முசிறி சட்டப்பேரவைத் தொகுதியில் 22 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர். இதில் இருவர் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 20 பேர் உள்ளனர்.
துறையூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 13 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர். இதில், யாரும் மனுக்களைத் திரும்பப் பெறவில்லை. அதனால் இறுதிப் பட்டியலில் 13 பேர் போட்டியிடுகின்றனர். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் தாக்கல்செய்யப்பட்டிருந்த 172 மனுக்களில் 13 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனால், இறுதி வேட்பாளர் பட்டியலில் 159 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் 159 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: மரைக்காயர் படத்துக்கு தேசிய விருது, மோகன் லால் நெகிழ்ச்சி!