தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் ஐந்தாயிரத்து 892 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இன்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 851ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 608ஆக உயர்ந்துள்ளது.
இதில், திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 799ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 899 பேர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 104 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் ஆறாயிரத்து 768 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை.
இதுவரை அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122ஆக உள்ளது. தற்போது 909 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.