ETV Bharat / city

அவர் என்னை கொலை செய்ய முயன்றார்: இளம்பெண் எஸ்பியிடம் மனு - கொலை முயற்சி வழக்கு

திருப்பூர்: கொலை செய்ய முயன்றவரை கைது செய்யக் கோரி இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கொலை முயற்சி செய்தவரை கைது செய்ய எஸ்பி அலுவலகத்தில் மனு
author img

By

Published : Aug 11, 2019, 1:05 AM IST

அவிநாசி, குப்பாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - பூங்கோடி தம்பதியினர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி பூங்கொடியின் வீட்டருகே கோழி கழிவுகளை கொட்டியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த பூங்கொடி ரத்தினசாமியிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அத்திரமடைந்த ரத்தினசாமி பூங்கொடியை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, கொலை முயற்சியிலும் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து பூங்கொடி அவிநாசி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி காவல்துறையினர் கடந்த 5ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் ரத்தினசாமியின் மனைவி பெண் காவலர் என்பதால் கைது செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த பூங்கொடி, தலித் விடுதலை கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

Intro:திருப்பூர் அருகே பெண்னை தரக்குறைவாக பேசி கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் காவலரின் கணவர் மீது வழக்கு பதிவு செய்தும், கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு.Body:திருப்பூர் மாவட்டம் அவிநாசி, குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள் -- பூங்கோடி தம்பதியினர். அதே பகுதியை சேர்ந்த துலசிமணி , திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார், இவரது கணவர் ரத்தினசாமி. இதனிடையே ரத்தினசாமி, பூங்கொடியின் வீட்டருகே கோழிக்கழிவுகளை கொட்டியதாக கூறப்படுகிறது, இதணை பூங்கொடி தட்டி கேட்க ஆத்திரமடைந்த ரத்தினசாமி, பூங்கொடியை தகாத வார்த்தைகளாள் பேசியதோடு, கொலை முயற்ச்சியிலும் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது . இதனையடுத்து பூங்கொடி அவிநாசி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி போலீசார் கடந்த 5 - ந் தேதி வழக்குபதிவு செய்த நிலையில், பெண் காவலரின் கணவர் என்ற காரணத்தால் அவிநாசி போலீசார் கைது செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவதாகவும், இனியும் காலம் கடத்தாமல், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவலராக பணியாற்றி வரும் துலசிமணியின் கணவர் ரத்தினசாமியை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண் பூங்கொடி, தலித் விடுதலை கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.