திருப்பூர்: பின்னலாடை நிறுவனம் ஒன்று, தங்கள் நிறுவனத்தில் பணிக்கு ஆள் சேர்க்க ஒட்டிய விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னலாடை நகரான திருப்பூரில் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ஏற்றுமதியும், 18 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்றுவருகிறது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு தற்பொழுது ஆள் பற்றாக்குறை நிலவிவருகிறது. பணியாளர்கள் வேலைக்கு வந்தாலும் பாதி நாள்கள் பணிபுரிந்து திரும்பி வராத சூழல் நிலவுகிறது.
‘நேர்மை, வாய்மை, தூய்மை’ - காமராஜரின் வாழ்க்கைப் பயணம் ஓர் பார்வை!
இதனால் முன்னதாக பெறப்பட்ட ஆர்டர்கள் முடித்து தரமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இச்சூழலில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் பல நிறுவனங்களுக்கு போதிய ஆள்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பணம் அதிகம் வேண்டும் என்று பணியாளர்கள் பெற்றுக்கொண்டு, மதுபோதையில் வேலைக்கு வராமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூரில் உள்ள சிறு பின்னலாடை நிறுவன உரிமையாளர் பேட்லாக் என்னும் தையல் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆள்கள் தேவை எனப் பலமுறை தெரிவித்தும் கிடைக்காததால் பணிக்கு வருபவர்களுக்கு மதியம் கட்டிங்கும், இரவு குவாட்டரும், தேனீருக்கும் காசும் வழங்கப்படும் என சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளார்.
மேரி கோமிற்கு பத்ம விபூஷன், பி.வி. சிந்துவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு
இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் செந்தில்வேல் என்பவர், விளம்பரம் செய்த நபருக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது பலவிதமாக ஆள்கள் தேடிய நிலையில் யாரும் வரவில்லை எனவும் இந்த சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சில மணி நேரங்களில் ஆள்கள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
தற்பொழுது இந்தச் சுவரொட்டி விளம்பரமும், பின்னலாடை நிறுவன உரிமையாளரின் குரல் பதிவும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.