திருப்பூரில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் ஏப். 6ஆம் தேதி சட்டப்பரேவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தினத்தில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய வாக்காளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாநகரில் பணிபுரியும் 800க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: தபால் வாக்குப்பதிவில் ஏற்பட்ட காலதாமதம்: வாக்களிப்பாளர்கள் அவதி