திருப்பூர்: பல்லடம் போக்குவரத்து கிளைப் பணிமனையில் பணிபுரிந்து வரக்கூடிய அரசுப் பேருந்து ஓட்டுநர் வடிவேல் வழக்கம்போல பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு பேருந்தை இயக்கி வந்துள்ளார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தும்போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டுமென மப்டியில் இருந்த திருப்பூர் தெற்கு காவல் நிலையை காவலர் சதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் மப்டியில் இருந்த காவலர் சதிஷ்குமார் தாக்கியதில் தநக்கு மூக்கு மற்றும் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதாக பேருந்து ஓட்டுநர் வடிவேல் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் வாக்குவாதம் அரசு பேருந்து ஓட்டுனர் வடிவேல் காவலர் தன்னை தாக்கியதாகவும் இதில் தான் காயமடைந்துள்ளதாக காவலர் சதீஷ்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் ஓட்டுநர் வடிவேல் மற்றும் காவலர் சதீஷ்குமார் இருவரும் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அவங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா' - தயாரிப்பாளர் ஆதம் பாவா