ETV Bharat / city

கோயில் நிலம் கோயிலுக்கே - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் - திருப்பூர் செய்திகள்

திருப்பூர்: கோயில் நிலம் கோயிலுக்கே சொந்தம் எனக்கூறி 5 கிராமங்களை சேரந்த மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

trippur
trippur
author img

By

Published : Nov 2, 2020, 1:50 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் உள்ளது.

வருடந்தோறும் இந்த கோயிலில் சித்திரை மாத திருவிழா 2 வாரம் நடைபெறும். இந்த திருவிழாவை ஆண்டிபாளையம் சின்னண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்தூர் புதூர் ஆகிய 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிவருகின்றனர்.

இந்த நிலையில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் 11.60 ஏக்கரில் 9 ஏக்கர் நிலத்தை காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநகர காவல்துறை 2013 முதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதனையடுத்து கோயில் பயன்பாட்டுக்கே நிலம் வேண்டும் எனவும் கோயில் நிலத்தை காவல்துறையினருக்கு வழங்கக்கூடாது என 5 ஊர் பொது மக்கள் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பிரிவில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோயில் நிலம் கோயிலுக்கே சொந்தம். எக்காரணத்தை கொண்டும் கோயில் நிலத்தை விட்டுத்தர மட்டோம் என முழக்கம் எழுப்பி முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேச்சு வார்த்தைக்கு அரசு அலுவலர்கள், காவல்துறையினர் வராதாது ஆர்ப்பாட்டக்கார்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.