திருப்பூர்: கொங்கணகிரியில் வசித்துவந்த மணி(55) என்பவர் மக்கள் நீதி மய்ய கட்சியில் உறுப்பினராக இருந்தார். இவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 36 வார்டில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று அப்பகுதி மக்களிடம் சொல்லி வந்தார்.
வாக்கு எண்ணிக்கையின் போது, அவருக்கு 44 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. இந்த வார்டில் திமுக வேட்பாளர் திவாகரன் 3,319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன்காரணமாக மணி மிகுந்த மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்பட்டது. இதனிடையே நேற்று வீட்டில் தகராறு நடந்தாக கூறப்படுகிறது.
இப்படிபட்ட சூழலில், மணி நேற்று(பிப்.24) இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த, திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து, உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாதி, மத அரசியல் மட்டுமே பாஜகவிற்குத் தெரியும் - கமல் ஹாசன்