திருப்பூரில் ஆண்டுதோறும் பின்னலாடை இயந்திரங்களின் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் இந்தாண்டும் திருப்பூர் - காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் இந்த கண்காட்சி இன்று தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியினை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக துணைத்தலைவர் சக்திவேல் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறுகையில், திருப்பூர் உற்பத்தியாளர்கள் வெளிநாடு உற்பத்தியாளர்களோடு, போட்டி போடுவதற்கு ஏதுவதாக இந்த கண்காட்சி அமையும்.
மேலும் அவர் கூறுகையில், பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு 15முதல் 20விழுக்காடு வரை மானியம் வழங்குவது வழக்கம். தற்போது மானியத்திற்காக சுமார் ஏழாயிரம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே மத்திய அரசு மானிய தொகையை விரைந்து வழங்கவேண்டும் என்றார்.