ETV Bharat / city

திருப்பூர்- ஆக்கிரமிப்பு காற்றாலை கம்பங்கள் எத்தனை? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி - திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவனங்கள் எத்தனை கம்பங்களை அமைத்துள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC
HC
author img

By

Published : Aug 18, 2021, 10:04 PM IST

சென்னை : திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவனங்கள் எத்தனை கம்பங்களை அமைத்துள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளின் எந்த வித அனுமதியும் பெறாமல் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஸ்பிரிங் ரெனிவெபில் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் 349 காற்றாலைகளை அமைத்து வருவதை எதிர்த்து சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தலைமை நீதிபதி விசாரணை
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் காற்றாலை நிறுவன தரப்பில், ஈரோடு பகுதியில் காற்றாலை மூலம் 300 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்காக ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்பரேசன் நிறுவனம் காற்றாலைகளை அமைக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Madras HC
சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
இதுவரை நிறுவப்பட்ட 125 காற்றாலைகளுக்கான கம்பங்களில் 3 கம்பங்கள் மட்டுமே நீர்நிலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நீர்நிலைகள் மட்டுமல்ல அரசு புறம்போக்கு நிலம், சாலைகளையும் ஆக்கிரமித்து காற்றாலைக்கான கம்பங்கள் நிறுவப்பட்டிப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

தள்ளிவைப்பு
இதையடுத்து, காற்றாலைகளுக்கான கம்பங்களை நீர்நிலைகளில் இருந்து மாற்று வழிகளில் அமைப்பது குறித்தும், கன்னிவாடி பகுதியில் எத்தனை கம்பங்கள் நீர்நிலைகளில் நிறுவப்பட்டுள்ளன என்பது குறித்தும் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

இதையும் படிங்க : சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அலுவலக வளாக கட்டடத்தை இடிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.