திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் ராசி திருமண மண்டபத்தில், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிலிருக்கும் அனைவருக்கும் உபயோகப்படும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமில்லாமல் வீட்டிற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டையில் நடந்த இதுபோன்ற ஒரு கண்காட்சியில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பொருட்களை வாங்கியதால், இந்தக் கண்காட்சியிலும் அதேபோன்று மக்கள் பங்கேற்பார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்!