கெளசல்யா என்பவரை காதல் திருமணம் செய்தற்காக மாற்று சமூகத்தை சேர்ந்த சங்கர் 2016ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்தியாநாராயாணன், நிர்மல்குமார் அமர்வில் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை பிப்ரவரி 27ஆம் தேதி தாக்கல் செய்ய இருதரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.