திருப்பூர்: உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னார் வனப்பகுதியில் தமிழ்நாடு கேரள எல்லை இணைகிறது. இதன் அருகே மூன்று ஆறுகள் சங்கமிக்கும் கூட்டாறு உள்ளது. கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆற்றில் பிறந்து ஒரு சில நாட்களான குட்டியானை ஒன்று அடித்து வரப்பட்டது. இதனை அறிந்த கேரள வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்று பல மணி நேரம் போராடி ஆற்றில் இருந்து குட்டி யானையை உயிருடன் மீட்டனர்.
மனிதர்களைக் கண்டு அஞ்சிய குட்டி யானை அவர்களுடன் செல்ல மறுத்து கத்தியது. பல போராட்டங்களுக்குப் பிறகு குட்டி யானையை அழைத்துச் சென்று தாய் யானை இருந்த கூட்டத்தின் அருகில் விட்டனர். பின்னர் அந்த குட்டியானை தாய் யானையுடன் இணைந்தது.
இதையும் படிங்க: Video: கனமழை காரணமாக கோவை குற்றால அருவி, நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்!