தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் விருதுநகர் முதல் கவுத்தம்பாளையம் வரை 765 கிலோ வாட் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மின் கோபுரங்களை நிலங்கள் வழியாகக் கொண்டுச் சென்றால் விவசாயம் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஆகையால், உயர் மின் கோபுர திட்டத்தை சாலையோரத்தில் புதைவடம் மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 'ஆங்கிலேயர்களின் அடிவருடிகள்...கல்விக்கொள்கையை புரிந்து கொள்வது கடினம்'- சி.பி. ராதாகிருஷ்ணன்!