திருப்பூர்
நாட்டின் 71ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தேசியக்கொடியை பறக்கவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களின் வாரிசுகளை கௌரவித்த ஆட்சியர், பின் சமாதானப் புறாக்களை பறக்கவிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளுக்கு சுமார் 93 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ராமநாதபுரம்
அதேபோல், ராமநாதபுரம் காவலர் கவாத்து மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தேசியக்கொடி பறக்கவிட்டார். தேசிய ஒருமைப்பாடு, அமைதியை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வருவாய், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 182 பயனாளிகளுக்கு 1.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தண்டனையின்றி பணியாற்றிய காவல் துறையினர், பல்வேறு ஊழியர்களின் பணியை பாராட்டி நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதையும் படிங்க: மதிநுட்பத்தால் வெற்றிகண்ட திருவிதாங்கூர் படைகள்!