திருப்பூர் மாவட்டம் அவிநாசி, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த 45 நாட்களை தாண்டியும் இதுவரையிலும் இந்த பஞ்சாலை நிறுவனங்களானது தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் வழங்காததால் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் உணவிற்கே வழியின்றி வறுமையில் வாடி வருகின்றனர்.
தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் உரிய ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உத்தரவிட்டிருந்த நிலையிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலை நிறுவனங்கள் இதை கடைபிடிக்கவில்லை. எனவே, அரசு உத்தரவின்படி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பஞ்சாலை தொழிலாளர் சங்கங்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:
முகக்கவசங்களில் வெரைட்டி : அசத்தும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்