கரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு ரயில் மூலம் இன்று திருப்பூர் வந்திறங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்களிடம் கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் முதற்கட்டமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ரயில் மூலம் திருப்பூர் வந்திறங்கிய அனைத்து பயணிகளின் முழுவிவரங்களும் ரயில்வே நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: சென்னையை முடக்க பரிந்துரை