ETV Bharat / city

விலையேற்றம் விழலுக்கு இறைத்த நீர் - உப்பு விவசாயிகள் வேதனை - thoothukudi salt tamil

விளைச்சல் இருக்கும்போது விலை இல்லாமல் போவதும், விலை இருக்கும்போது விளைச்சல் இல்லாமல் போவதும் என இயற்கையின் விளையாட்டுக்கு ஆண்டுதோறும் விவசாயிகள் ஆளாகிவருகின்றனர். இந்த வேதனைப் பட்டியலில், இந்த முறை தூத்துக்குடி உப்பு விவசாயிகளும் இணைந்துள்ளனர்.

உப்பு விவசாயிகள் வேதனை
உப்பு விவசாயிகள் வேதனை
author img

By

Published : Jun 1, 2021, 2:21 PM IST

Updated : Jun 2, 2021, 8:56 AM IST

தூத்துக்குடி: நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும், தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது தூத்துக்குடி. மாவட்டத்தின் தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

உப்பு உற்பத்திக்கு உகந்த காலம்

தூக்குக்குடியின் முக்கியத் தொழிலான மீன்பிடிப்புக்கு அடுத்தபடியாக, சுமார் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உப்பு உற்பத்தி மூலம் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டின் மொத்த உப்பு தயாரிப்பில் பெரும்பாலானவை தூத்துக்குடியிலேயே உற்பத்தியாகின்றன. இங்கு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்திசெய்யப்படுகின்றது.

வடகிழக்குப் பருவமழை குறையத் தொடங்கும் ஜனவரி மாதம் முதல் அடுத்த மழை தொடங்குவதற்கு முந்தைய செப்டம்பர் மாதம் வரையில் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலம்.

ஜனவரி மாதத்தில் உற்பத்திக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கி பிப்ரவரி மாதத்தில் உற்பத்தி தொடங்கும். தமிழ்நாட்டில் கோடை தொடங்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்கள், உப்பு உற்பத்திக்கு உகந்த காலம்.

பருவநிலையைப் பொறுத்து சில சமயம் ஒன்பது மாதங்கள் வரையிலும் நீளும். இந்த ஆறு மாத காலத்தில் உற்பத்தியாகும் உப்பைத்தான் ஆண்டு முழுவதும் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் ஆண்டு முழுவதும் தென்மாநிலங்களுக்கு விற்பனை செய்வார்கள்.

கைக்கொடுத்து காலை வாரிய மழை

கடந்தாண்டு அக்டோபர், நவம்பரில் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக தொடங்கியதால், உப்பு விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு கூடுதல் அவகாசம் கிடைத்தது, அப்போது வழக்கத்தைவிட அதிக விலை இருந்ததால் உப்பு விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

தாமதமாக தொடங்கியதால் என்னவோ, தாமதமாகவே விடை பெற்றது வடகிழக்குப் பருவமழை. இதனால், பிப்ரவரியில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான் தொடங்கியது.

அதேபோல, உற்பத்தியின் உச்ச காலகட்டமான, ஏப்ரல், மே மாதங்களில் ஐப்பசி, கார்த்திகை மாதம்போல பெய்த தொடர்மழை உப்பு உற்பத்தியை முடக்கிப் போட்டுவிட்டது. வழக்கமாக இந்தக் காலக்கட்டத்தில் 25 முதல் 30 விழுக்காடு (6.25 லட்சம் டன் முதல் 7.5 லட்சம் டன்) உற்பத்தி நடைபெற்றுவிடும். இந்தக் காலகட்டத்தில், மழை காரணமாக 10 விழுக்காடு (2.5 லட்சம் டன்) கூட உற்பத்தி நடைபெறவில்லை.

"ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் உப்பு உற்பத்தி நடைபெறும். ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான நான்கு மாதங்கள் மிக முக்கியமானவை. அப்போதுதான் அதிகபட்சமாக உப்பு உற்பத்திசெய்யப்படும். இந்த வருஷம் அடிக்கடி பெய்த மழையால் உப்பு வயல்களில் விளைச்சல் இல்லாமல் இருக்கிறது.

10 நாள் அடிச்ச வெயிலில் விளைந்த உப்பை வாற நினைக்கையில், மறுநாள் மழை வந்து விளைந்த உப்பை கரைத்துவிடுகிறது. இதுபோன்றே ஒவ்வொரு முறையும் உப்பு உற்பத்தியை மழை பாழ்படுத்திவருகிறது" என விவசாயிகளின் வேதனை தெரிவிக்கிறார் தன்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் தேன் ராஜ்.

"இந்த ஆண்டு கையிருப்புக்கு கூட உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. ஆண்டுக்கு 25 லட்சம் டன் உற்பத்தி நடைபெறும் இடத்தில், இதுவரை 4 லட்சம் டன் கூட உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. விவசாயம்போல இயற்கையையே சார்ந்தே உப்பு உற்பத்தி நடைபெறுவதால், வெப்பம் இருந்தால் மட்டுமே உப்பு விளைவிக்க முடியும்.

இயற்கையின் மாற்றத்தின் காரணமாக மழை பெய்து உப்பு உற்பத்திசெய்ய முடியாததால் உப்புக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது" என்கிறார் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சேர்மநாதன்.

விலையேற்றம் வீணே

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 22 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று டன் ஒன்று ரூ.800 முதல் 1,200 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தக ரீதியாக கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.

உப்பு விவசாயிகள் வேதனை

இந்த ஆண்டு, கடந்த ஆண்டு கையிருப்பு 10 லட்சம் டன் இருந்த நிலையில் பிப்ரவரி மாத விளைச்சலை வைத்து உற்பத்தியாளர்கள் சமாளித்து வந்தனர். தற்போது தப்பி பெய்த மழையால் உப்பு உற்பத்தி நடைபெறாத நிலையில் உள்ளூர் தேவைக்குக்கூட குஜராத் மாநிலத்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உப்பின் விலையும் அதிகரித்துள்ளது.

தட்டுப்பாடு காரணமாக உப்பு டன் ஒன்றுக்கு, ரூ.3,800 முதல் 4,500 வரை விலை இருந்தும் கையிருப்பு இல்லாததால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

இன்னும் கொஞ்ச நாளில் மழை ஓய்ந்து, வெயில் அடித்தால் உற்பத்தியைத் தொடங்கி மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் உற்பத்தியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திவருகிறது கரோனா. கடந்த அலையில், உப்பு தொழிலாளர்களுக்கு ஊரடங்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டாம் அலை ஊரடங்கிலிருந்து, அத்தியாவசியத் தேவையான உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு விலக்கு அளித்து, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கின்றனர்.

இதையும் படிங்க: உற்பத்தி குறைவால் தூத்துக்குடியில் அதிகரித்துள்ள உப்பு விலை..!

Last Updated : Jun 2, 2021, 8:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.