ETV Bharat / city

கயத்தாற்றில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் - வைகோ - Thoothukudi district

கயத்தாற்றில் ஊமைத்துரையும், கட்டபொம்மனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

கோரிக்கை வைத்த
கோரிக்கை வைத்த
author img

By

Published : Oct 16, 2021, 8:40 PM IST

தூத்துக்குடி: வீரபாண்டிய கட்டபொம்மன் 222 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அருகே கயத்தாற்றில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அவருடன் அவரது மகன் துரை வையாபுரி, கட்சி நிர்வாகிகள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இன்று(அக்.16) நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் 222 ஆம் ஆண்டு நினைவு தினம்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறுகையில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடுவதற்கு முன்பு அவர் கூறியது ’வீரர்கள் தோன்றுவார்கள் மீண்டும் இந்த மண் விடுதலை செய்யப்படும்’ என்று சபதம் செய்துவிட்டு அவர் மடிந்தார். பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிகழ்வுகள் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வெளிவந்தது.

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படம்

பின்னர் நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக உருவாகி. அந்தப்படம் ஆசிய நாட்டின் திரைப்பட போட்டியில் பரிசும் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு சிவாஜியின் புகழ் திசை எங்கும் பரவியது. கயத்தாரில் அவரது சொந்த செலவில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை நிறுவினார்.

தொடர்ந்து பேசிய வைகோ, திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் நான் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை எழுப்ப வேண்டும் என வலியுறுத்தினேன். எனது வலியுறுத்தலின்படி கோட்டை எழுப்பப்பட்டது.

கயத்தாற்றில் ஊமைத்துரையும், கட்டபொம்மனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் இப்பொழுது கோரிக்கை வைக்கிறேன்.

கட்டபொம்மனின் புகழையும், தியாகத்தையும் மறைக்க சிலர் முயற்சிக்கிறார்கள், கட்டபொம்மனின் புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும். நடிகர் சிவாஜியின் பெயரும் நிலைத்திருக்கும்.

’வீரர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது நமக்கு வீரத்தைக் கொடுக்கும்என்பதால் ஆண்டுதோறும் வருகிறேன்" என அவர் கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு மானியம் வழங்க வேண்டும் - திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.