தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லிங்கேஸ்வரன், நிஷா தம்பதியினர். இவர்களது மகள் ரேவதி சஞ்சனா(2). இவர்கள் நேற்று மாலை தொலைக்காட்சியில் சுஜித் மீட்புப் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை சஞ்சனாவைக் காணவில்லை. இதனால் பதற்றமடைந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் லிங்கேஸ்வரன் தனது வீட்டின் குளியலறையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் மூச்சுப்பேச்சின்றி கிடந்துள்ளார்.
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க:
சுஜித்தை வைத்து தீபாவளியை மறைக்க முயலுகின்றனவா ஊடகங்கள்? - விளக்குகிறார் மூத்த ஊடகவியலாளர்