ETV Bharat / city

மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிய 2 பேர் உயிரிழப்பு - மதுபோதை

தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது சரக்கு ரயில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய 2 பேர் பலி

author img

By

Published : Jun 11, 2022, 5:13 PM IST

தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே சரக்கு ரயிலில் மூன்று பேர் அடிப்பட்டு கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் இருவர் உயிரிழந்ததையும், ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதையும் கண்டனர்.

இதையடுத்து காயமடைந்தவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவரது உடலையும் உடற்கூராய்விற்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட தகவலில் காயமடைந்தது பணகுடியை சார்ந்த ஜெபசிங் (27) என்பதும், உயிரிழந்தது திருவிக நகரைச் சேர்ந்த மாரிமுத்து (23), பசும்பொன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பதும் தெரியவந்தது. அதோடு மூவரும் மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சீரியல் பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.