தூத்துக்குடி: திருச்செந்தூர் அடைக்கலாபுரம் அற்புதநகரில் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பெரு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஆலய திருவிழா நேற்று(செப்.29) கொடியேற்றப்பட்டு, கொடிபட்டமானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, ஜெபமாலை பவனி நவநாள் திருப்பலி ஆரம்பமாகி, கொடிப்பட்டத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் திருப்பலி, நற்கருணை, சப்பரபவனி நடைபெறுகிறது.
9-வது நாளான (அக்.6) ஆம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான, ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது.
பின், (அக்.8) ஆம் தேதி அசன விருந்து நடக்கிறது.
இதையும் படிங்க: செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா...