தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியின் 12 வார்டுகளில், 9 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் (செப்.29) வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏற்கனவே 1, 2, 11 ஆகிய மூன்று வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 9 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று(அக்.01) கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதிவான 64.69% வாக்குகளை எண்ணும் பணி காலையில் தொடங்கப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 8 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக 6 இடங்களிலும், மதிமுக மற்றும் காங்கிரஸ் 1 இடங்களிலும், மீதமுள்ள 1 இடத்தை சுயேட்சை ஒருவரும் கைப்பற்றியுள்ளனர். கடம்பூர் பேரூராட்சியில் முதல் முறையாக திமுக போட்டியிட்டு தேர்தலை சந்தித்து கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி -தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்