தூத்துக்குடி: ஒன்றிய அரசு இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திராவின் சார்பில் தூய்மை இந்தியா 2.0 (Clean India Campaign) திட்டம், ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதிமுதல் 31ஆம் தேதிவரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்கா, கடற்கரைப் பகுதியைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், தூய்மை இந்தியா திட்டத்திற்கு இளைஞர்கள் என்றும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், நேரு யுவகேந்திரா இளைஞர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சாலையோரங்களில் கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். ஷாரா கலைப்பயிற்சி மைய மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்தவாறு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஊராட்சி நிதியைக் கையாடல் செய்த ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்