தூத்துக்குடி: குஜராத் மாநிலம் ஓகா நகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றைத் தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.
அதன்படி, வண்டி எண் 09568 ஓகா-தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 2 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஓகாவிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு 12 55 மணிக்குப் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 4:45 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
மறுமார்க்கத்தில், வண்டி எண் 09567 தூத்துக்குடி-ஓகா வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏப்ரல் 4 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடியில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, புதன்கிழமைகளில் 3:35 மணிக்கு ஓகா சென்று சேரும்.
இந்த ரயில்கள் துவாரகா, ஜாம்நகர், ஹாபா, ராஜ்கோட், அகமதாபாத், நடியாட், ஆனந்த் வடோதரா, பாரூச், சூரத், வல்சாட், வாபி, வாசை ரோடு, கல்யாண், புனே, சோலாப்பூர், வாடி, ரைச்சூர், மந்த்ராலயம் ரோடு, அடோனி, குண்டக்கல், அனந்தபூர், தர்மபுரம், ஹின்டுபூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.