தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாமஸ் தலைமையிலான காவல் துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சேதுக்குவாய்த்தான் வடக்கு சுடுகாடு அருகே உள்ள ஆற்றுப்படுகையில் புதுநகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 19), தெற்கு நல்லூரை சேர்ந்த சுகுமார்(20), சேர்ந்தபூமங்கலம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த உதயஆசாத் (20) ஆகியோர் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜுடி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ்குமார், சுகுமார் மற்றும் உதய ஆசாத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 0.500 யூனிட் ஆற்று மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் 3 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:பொன்னை ஆற்று தரைபால சீரமைப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்!