சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேசிய கட்சிகளின் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் வந்தடைந்தார். இது அவரது இரண்டாவது கட்ட தேர்தல் சுற்றுப்பயணமாகும்.
சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் வழக்கறிஞர் அணி கலந்துரையாடலில் பங்கேற்க, அவர் கார் மூலம் புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகளிர் அணி சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்ற ராகுல் காந்தி, காரிலிருந்து இறங்கி வந்து சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொஞ்சி மகிழ்ந்தார்.
இதையும் படிங்க: தேர்தல் திருவிழா: தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!