ETV Bharat / city

’பாஜக வளர்ச்சி கண்டு திமுகவின் வயிறு எரிகிறது’ - பொன்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி: பாஜக வேகமாக வளர்வதை பார்த்து திமுகவினரின் அடிவயிறு பற்றி எரிவதாக பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ponnar
ponnar
author img

By

Published : Sep 28, 2020, 8:19 PM IST

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேர்தல் பணிகளில் எவ்வாறு முனைப்புடன் ஈடுபடுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நாடே தீப்பற்றி எரிகிறது என்ற, கனிமொழியின் வார்த்தையில் இருந்து ஒன்று புரிகிறது. தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்வதை பார்த்து திமுகவினரின் அடிவயிறு பற்றி எரிகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக மாற்றவும், வறுமையை ஒழிக்கவும் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வருவது என அறிஞர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனை விவசாயிகளும் வரவேற்கின்றனர். ஆனால், விவசாயிகளை வைத்து அரசியல் நடத்த விரும்புபவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களது இன்றைய போராட்டம் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து கிராமப்புற விவசாயிகளுக்கு புரிய வைப்பதற்காக கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தே விவசாயிகள் இச்சட்டங்களை வரவேற்றுள்ளனர். இது குறித்து முழுமையாக தெரியவரும் போது அதிக வரவேற்பு கிடைக்கும்.

’பாஜக வளர்ச்சி கண்டு திமுகவின் வயிறு எரிகிறது’

பதவியை குறி வைத்து பாஜகவில் யாரும் இல்லை. எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டை ஆளும் நிலைக்கு பாஜகவை கொண்டு வரக்கூடிய பணியில் உள்ளோம் “ என்று கூறினார்.

இதையும் படிங்க: உழவர் சந்தை, நியாய விலைக்கடை ஒன்றுமில்லாமல் போகும் - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.