ETV Bharat / city

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர் - துப்பாக்கி குண்டுகளை தேடும் காவல் துறை - துப்பாக்கி குண்டுகளை தேடும் காவல் துறை

தூத்துக்குடியில் ரவுடி துரைமுருகன் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர் நான்கு துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.

துப்பாக்கி குண்டுகளை தேடும் காவல் துறை
துப்பாக்கி குண்டுகளை தேடும் காவல் துறை
author img

By

Published : Oct 28, 2021, 10:52 PM IST

தூத்துக்குடி: கூட்டாம்புளி அடுத்துள்ள திருமலையாபுரத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் மீது ஏழு கொலை வழக்குகள் உள்பட 35க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பிற்பகலில் முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்த துரைமுருகனை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது துரைமுருகன் காவல் துறையினரை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதாக தெரிகிறது.

என மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

இதனால், தற்காப்புக்காக உதவி ஆய்வாளர், துரைமுருகனை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கழுத்து, தலை உள்பட மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த என்கவுண்டர் சம்பவத்துக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்த மனித உரிமைகள் அமைப்புகள், இதுசம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதாகப் செய்திகள் வெளியாகின.

துப்பாக்கிக் குண்டுகளைத் தேடும் காவல் துறை

இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இது சம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

துப்பாக்கி குண்டுகளை தேடும் காவல் துறை

இந்நிலையில் இன்று (அக்.28) சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் ரவுடி உடம்பை தொலைத்துவிட்டு வெளியே சென்ற மூன்று தோட்டாக்கள், வானத்தை நோக்கி சுட்ட ஒரு தோட்டா உள்பட நான்கு துப்பாக்கிக் குண்டுகளைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துரைமுருகன் திட்டமிட்டு கொலை? கதறிய குடும்பம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.