ETV Bharat / city

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஆதரவாளர்கள் மனு - ஸ்டெர்லைட் ஆதரவாளர் பேட்டி

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஆதரவாளர்கள் மனு
author img

By

Published : Oct 22, 2019, 6:48 AM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சாமிநத்தம் உட்பட பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆதரவாளர் பேட்டி

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையில் ஊழியராக பணியாற்றி வருவதாகவும், ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாங்கள் வேலையின்றி தவிப்பதாகவும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை இயங்கிக் கொண்டிருந்தபோது தாமிர உற்பத்தியில் முன்னணியில் திகழ்ந்த இந்தியா தற்போது வெளிநாடுகளில் இருந்து தாமிரம் இறக்குமதி செய்து வருவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையால் மீனவ மக்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்ததாகவும் அவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க :

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சிபிஐ மீது நம்பிக்கை இல்லை -பாத்திமா பாபு

Intro:ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஆதரவாளர்கள் மனு
Body:ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஆதரவாளர்கள் மனு

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சாமிநத்தம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் பேட்டியளிக்கையில், கடந்த 7 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறேன். ஸ்டெர்லைட் ஆலையில் மீனவ மக்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். ஒரு சில பேர் ஏற்படுத்திய புரளிகளால் தற்பொழுது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நாங்கள் வேலையின்றி தவித்து வருகிறோம். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணியை மேற்கெள்வதற்காக திறந்து வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தாமிர உற்பத்தியில் முன்னணியில் திகழ்ந்து வந்தது. ஆனால் தற்போது நாம் வெளிநாடுகளில் இருந்து தாமிரம் இறக்குமதி செய்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையால் மீனவ மக்களுக்கு கல்வி மற்றும் பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அவையெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேட்டி: நான்சி.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.