ETV Bharat / city

நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி... நெகிழ்ந்துபோன கடம்பூர் ராஜு: காரணம் இதுதான்!

author img

By

Published : Mar 16, 2021, 10:06 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட கழுகுமலை பேரூராட்சியில் இன்று (மார்ச் 16) பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, எந்த நேரத்தில் அழைத்தாலும் ஓடிவரும் தொண்டனாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ

கழுகுமலை பேரூராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்குச் சென்று, தனது பத்தாண்டு கால சாதனைகளைத் துண்டுப் பிரசுரங்களாகப் பொதுமக்களுக்கு வழங்கி, அதனை விளக்கி வாக்கு சேகரித்தார் கோவில்பட்டி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு.

தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு

மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மாற்றுத்திறனாளி, 'நீங்கள்தான் (அமைச்சர் கடம்பூர் ராஜு) உங்கள் சொந்த நிதியிலிருந்து மூன்று சக்கர வாகனம் வாங்கி கொடுத்தீர்கள், உங்களுக்கு நன்றி' எனக் கூறினார்.

துண்டுப்பிரசுரங்கள்

இதனால் அமைச்சர் நெகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து வியாபாரிகளிடம் சென்று நேரடியாக வாக்கு சேகரித்தார். இதேபோல் பொதுமக்கள், பேருந்தில் பயணம்செய்த பயணிகள் என அனைவரிடம் சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

பின்னர் பரப்புரையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், "நான் இந்த மண்ணின் மைந்தன், மற்ற வேட்பாளர்கள் பற்றி நான் பேசப் போவதில்லை, என்னை எப்போது வேண்டுமானாலும் யாரும் அணுகலாம். ஆண்டு முழுக்க இதே தொகுதியிலேயே இருப்பவன். எந்த நேரத்தில் அழைத்தாலும் ஓடிவரும் தொண்டனாக இருப்பேன். எந்த நேரத்தில் அழைத்தாலும் ஓடிவரும் தொண்டனாக பத்தாண்டுகள் செயல்பட்டிருக்கிறேன்.

இங்கு சமுதாயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொகுதிவாழ் மக்கள்தான் என்று கூறுவேன். இங்கு ஒருதாய் மக்களாகத்தான் இணக்கமாக வாழ்ந்துவருகிறோம். மத்தியில் டெல்லியில் எப்படி பாஜக ஆட்சி மலர்ந்தது. அதேபோல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என ஆதரித்தது பாஜகதான்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'அதிமுக, பாஜகவை அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைய வைக்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.